தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் விதிகளின்படிசிறை கைதிகளுக்கு கஞ்சி, உப்புமா, சட்னி, பொங்கல், அரிசி சாதம், சாம்பார் ஆகியவை வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிக்கன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் காலையில் பொங்கல், அவித்த முட்டை, மதியம் சிக்கன் கிரேவி, மாலை சூடான சுண்டல், டீ, இரவு சப்பாத்தி சென்னா மசாலா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 96 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது முதல்கட்டமாக சென்னை புழல் சிறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.