அதன் பிறகு திமுக அரசு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த திட்டம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மகளிர் காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யார் யாருக்கு இந்த உரிமை தொகை கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த திட்டம் அவனுக்கு வர இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் எந்த முறையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.

அதாவது ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை ரேஷன் கார்டு மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுமா என்று காத்திருக்கின்றனர். ஒருவேளை இந்த உரிமை தொகை வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டால் இஎம்ஐ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிகளில் இருந்து அந்த பணம் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடையிலேயே பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்பட்டாலும் சிக்கல்கள் உள்ளது. எனவே அரசு உடனடியாக பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.