தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி புதிய அரசு மருத்துவமனைகள் அமைப்பதற்கு ரூபாய் 1090 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று 500 அரசு மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவத் துறை வரலாற்றில் ஒரே நாளில் 500 மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளதாகவும், மருத்துவமனைகள் திறந்த உடன் மக்கள் சேவைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.