ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 18 பேரை இன்னும் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி இரவு மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிய பயங்கர விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதி அன்று சிபிஐ அதிகாரிகள் பாலசோர் சென்று விசாரணை நடத்தியதில் 18 பேர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.