தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு புத்தக சுமையை குறைக்கும் நோக்கில் “நோ பேக் டே” திட்டத்தை கவர்னர் தமிழிசை அறிமுகம் செய்து உள்ளார். இதையடுத்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு “நோ பேக் டே” திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இன்றி பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு அன்றைய தினம் மாணவர்களுக்கு கை வேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்தும் அளிக்கவேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஆளுநர் தலைமையில் நடந்தது. அப்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்குதல், பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி, மதிய உணவு வாரத்தில் 2 நாட்கள் சிறு தானிய உணவு வழங்க வேண்டும். நீட்தேர்வுக்கு சிறப்பு வல்லுநர்களை கொண்டு பயிற்சி நடத்த வேண்டும்.

பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதனை உடனே சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் படிக்காமல் இடைநின்ற மாணவர்களுக்கு பள்ளிக்கு மீண்டும் வர ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பொதுத்தேர்வுகளில் முதல் இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மாணவர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.