மத்திய-மாநில அரசு ஊழியர்கள் பல வருடங்களாகவே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனினும் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு இருப்பதால் நிதிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் ஏற்படும் நிதிச்சுமை பிரச்சனையை சமாளிப்பதற்காக புது ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும், சிறப்பு ஓய்வுதிய நிதியை உருவாக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதோடு நடப்பு ஆண்டில் மட்டுமே சிறப்பு ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்வதற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்வதற்குரிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று தமிழகத்திலும் கூடிய விரைவில் ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.