உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஐபோன் 15 விநியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

அதன்படி, டெல்லி கமலா நகரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் ‘ஐபோன் 15’ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் மீது டெல்லி காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.