இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த2023 ஆம் ஆண்டு  ஜூலை 27, மானியம் வழங்கப்பட்டது.

அதன் பின் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அடுத்த மாத தவணையும் சேர்த்து நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மானியம் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்திற்கு நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்கள், தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருப்போர் என அனைவரும் தகுதி ஆனவர்கள். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.