
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023 முழு அட்டவணை: MI இன் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. மேலும் இறுதிப் போட்டி மே 28 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் தனது ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொள்கிறது. 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2022 சீசனில், லீக் கட்டத்திற்குப் பிறகு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. எனவே மும்பை அணி இந்த 2023 சீசனில் வலுவாக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணி குழு ஏ -இல் இடம் பெற்றுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான MI க்கானபோட்டிகள், மைதானங்கள் மற்றும் போட்டி நேரங்களின் முழு பட்டியல் இங்கே.
குரூப் A : மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
MI ஐபிஎல் 2023 அட்டவணை :
⦿ போட்டி 1: ஏப்ரல் 2, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 2: ஏப்ரல் 8, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 3: ஏப்ரல் 11, 2023 – டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 4: ஏப்ரல் 16, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை (பிற்பகல் 3:30 மணி IST)
⦿ போட்டி 5: ஏப்ரல் 18, 2023 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் v மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 6: ஏப்ரல் 22, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 7: ஏப்ரல் 25, 2023 – குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 8: ஏப்ரல் 30, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 9: மே 3, 2023 – பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மொஹாலி (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 10: மே 6, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை (பிற்பகல் 3:30 மணி IST)
⦿ போட்டி 11: மே 9, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 12: மே 12, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மும்பை (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 13: மே 16, 2023 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி IST)
⦿ போட்டி 14: மே 21, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை (பிற்பகல் 3:30 மணி IST)
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023 அணி :
ரோஹித் சர்மா (கே ), டிம் டேவிட், ராமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா,அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால், கேமரூன் கிரீன், ஜே ரிச்சர்ட்சன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ராகவ் கோயல்.