RCB IPL 2023 முழு அட்டவணை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. மேலும் இறுதிப் போட்டி மே 28 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணி புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது மற்றும் ஐபிஎல் 2022 இல் இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது.  ஆர்சிபி அணிக்கான போட்டிகள், மைதானங்கள் மற்றும் போட்டி நேரங்களின் முழு பட்டியல் இங்கே காணவும். RCB குழு B இல் இடம்பெற்றுள்ளது.

குரூப் B : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

RCB IPL 2023 அட்டவணை :

⦿ போட்டி 1: ஏப்ரல் 2, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 2: ஏப்ரல் 6, 2023 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 3: ஏப்ரல் 10, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெங்களூரு (பிற்பகல் 3:30 மணி IST)

⦿ போட்டி 4: ஏப்ரல் 15, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு (பிற்பகல் 3:30 மணி IST)

⦿ போட்டி 5: ஏப்ரல் 17, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 6: ஏப்ரல் 20, 2023 – பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மொஹாலி (மதியம் 3:30 மணி IST)

⦿ போட்டி 7: ஏப்ரல் 23, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு (பிற்பகல் 3:30 மணி IST)

⦿ போட்டி 8: ஏப்ரல் 26, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 9: மே 1, 2023 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 10: மே 6, 2023 – டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 11: மே 9, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 12: மே 14, 2023 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ஜெய்ப்பூர் (பிற்பகல் 3:30 மணி IST)

⦿ போட்டி 13: மே 18, 2023 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ஹைதராபாத் (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 14: மே 21, 2023 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி IST)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் 2023 அணி :

ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ஃபின் ஆலன், விராட் கோலி, ரஜத் படிதார், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, சோனு யாதவ்,மனோஜ் பந்தேஜ், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், கர்ண் ஷர்மா, டேவிட் வில்லி (ENG), அவினாஷ் சிங், ராஜன் குமார், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா.