ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூர் அணி 221 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

இந்த போட்டிகளின் மூலம் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களுக்கும் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷாம் கரன் மற்றும் பெங்களூர் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. அதாவது பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை முடிக்கவில்லை. இதனால் பெங்களூருக்கு கேப்டன் ஷாம் கரனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளின்படி லெவல் ஒன் குற்றத்திற்காக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி டூ பிளெஸ்ஸிஸ்-க்கு அவருடைய கட்டணத்தில் 50% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.