ஐபிஎல் 2024 சீசன் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டியில் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா செயலியில் ரசிகர்கள் நேரலையில் பார்க்கலாம். 4K தரத்தில் முழு போட்டியையும் பார்க்க 25 ஜிபி, 1080p க்கு 12GB, 720p க்கு 2.5 GB மற்றும் 480p க்கு 1.5GB டேட்டா தேவைப்படும்.