தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக தங்களின் பால் விலையை லிட்டருக்கு  ரூ.2 உயர்த்தியுள்ளது. தனியார் பால் நிறுவனங்களான ஜெர்சி, ஹெரிடேஜ், திருமலா மற்றும் வல்லபா, சீனிவாசா போன்ற பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் இரண்டு வரை அதிகரித்துள்ளது.

இந்த விலையேற்றத்தை  தொடர்ந்து இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாயிலிருந்து 52 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 62 லிருந்து 64 ஆகவும், நிறை கொழுப்பு பால் லிட்டருக்கு 70 லிருந்து 72 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல தயிர் விலை ரூ.72 லிருந்து ரூ.74 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.