சென்னை மாதவரம் பகுதியில் புஷ்பராஜ் என்ற 35 வயது நபர் தனது மாமியார் வசந்தியை (65) அடித்துக் கொன்ற சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. புஷ்பராஜுக்கு அதீத குடிப்பழக்கம் மற்றும் வேலைக்கு செல்லாமல், தினமும் குடிபோதையில் வீடு திரும்பும் அவர், மனைவி ஜான்சியை சரமாரியாக தாக்கி வந்துள்ளார். இதில் ஜான்சியின் குடும்பத்தினர் தலையிட்ட போதிலும், புஷ்பராஜின் மோசமான இந்த நடத்தை தொடர்ந்தது.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த புஷ்பராஜ், ஜான்சியை அவரது தாய் வசந்தி கண்முன்னே தாக்கியுள்ளார். இந்நிலையில் ஜான்சியின் தாயார் வசந்தி தலையிட்டு, புஷ்பராஜின் செயல்களை கேள்வியெழுப்பியபோது, அவர் ஆத்திரத்தில் விறகுகளை எடுத்து சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த மாதவரம் போலீசார், புஷ்பராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.