குலசேகரம் மழை விலை தோட்டங்கரை பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 74 வயது ஆகும் நிலையில் அவருடைய மனைவி கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் சொத்தை இரு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். அதாவது தன்னுடைய மகளை திருமணம் செய்து வைக்க பணம் இல்லாததால் பலரிடம் கடன் வாங்கிய நிலையில் அதனை அடைப்பதற்காக மூத்த மகனுக்கு நிலத்தில் பாதியை கொடுத்து பணம் வாங்கி கடனை அடைத்துவிட்டார்.

பின்னர் இளைய மகனுக்கு பூர்வீக வீட்டை கொடுத்த நிலையில் அவர் அந்த வீட்டை இடித்து புதிய வீடு கட்ட வேண்டும் என்பதற்காக தன்னுடைய பெயரில் பட்டாவை மாற்றி கேட்க இவரும் மாற்றி கொடுத்துள்ளார். ஆனால் புதிய வீடு கட்டிய பிறகு சரியாக மகனும் மருமகளும் சாப்பாடு கொடுக்காததோடு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் அவர் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வீட்டின் முன்பாக ஒரு கூரை அமைத்து கொடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவருக்கு தினசரி சாப்பாடு கொடுக்கும் நிலையில் அவர் இது தொடர்பாக சப் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு நியாயம் வாங்கி தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.