சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ பசலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பாலமுருகன் வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்துல பாலமுருகனை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயம் அடைந்தவருக்கு மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடை ஏற்பட்டது.

அந்த மருத்துவமனையில் ஜெனரேட்டரும் கிடையாது அரை மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வரவில்லை. இதனால் தங்களது செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பாலமுருகன் தலையில் தையல் போட்டு சிகிச்சையை தொடர்ந்தனர். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் இருக்கும் முக்கிய அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.