கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்க கேட் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சில வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று சோதனை நடத்தியதில் 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிவசங்கரன், ஹரிஹரன் மற்றும் ஆனந்த் என்பது தெரியவந்தது.

இதில் சிவசங்கரன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அந்த பெண்ணையும் அவரின் கணவரையும்  கொலை செய்ய திட்டமிட்டு தன்னுடைய நண்பர்களுடன் அங்கு வந்து தங்கியதாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.