மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே தொண்டர்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயகத்தை காத்திட வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அறிவுறுத்திய அவர், பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயக போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.