தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் “பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வது தான் எங்களுடைய வழக்கம்ஆகும். வாதங்களுக்கு வாதங்கள் வைக்க தயாராக உள்ளோம். மிரட்டி பணிய வைக்க நினைத்தால் குனிய மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் பாஜக அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.