மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார். இதையடுத்து கடந்த 9ஆம் தேதி மேலும் 10 லட்ச ரூபாயை அந்த கும்பலுக்கு பேராசிரியை அனுப்பி வைத்து உள்ளார். அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியை உடனே  சைபர் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடனே வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து பணப் பரிவர்த்தனையை நிறுத்தினர். இதன் வாயிலாக பேராசிரியையின் பணம் 7.52 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது. எனினும் 5.66 லட்ச ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடமிருந்து மீட்கமுடியவில்லை. இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்காமல் மக்கள் கவனமாக இருக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.