மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மூர்த்தி என்பவர் ஒப்பந்த ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவி சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதனை அறிந்த மூர்த்தி உனது பெற்றோரிடம் அந்த மாணவரை காதலிப்பதாக கூறுவேன் என மாணவியை மிரட்டியுள்ளார்.

மேலும் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.