திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் 16 வயதுடைய சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவனின் வீட்டிற்கு அருகே திருமணமான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் வினோதினி சிறுவனிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த டிசம்பர் மாதம் வெளியூருக்கு அழைத்து சென்றார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து சிறுவனை மீட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது வினோதினி வேறு ஊருக்கு அழைத்து சென்று சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.