உடலை துண்டுதுண்டாக வெட்டி காட்டில் வீசிய தம்பதி…. காரணம் என்ன…? கேரளாவில் ஓர் பயங்கர சம்பவம்…!!

கேரளாவில்  ஹோட்டல் உரிமையாளர்  படுகொலை செய்யப்பட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58). இவர் கடந்த மே 18ஆம் தேதி, எரஞ்சிபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பி3 மற்றும் பி4 அறைகளை முன்பதிவு செய்துள்ளார். அதே விடுதியின் மேல் மாடியில் ஷிபில் (22), பர்ஹானா (18) ஆகியோர் தங்கியுள்ளனர். இந்நிலையில் மே 19 அன்று, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரு பையுடன் சென்ற காட்சிகள் கேமராக்களில் பதிவாகியுள்ளன.

சித்திக் காணாமல் போனதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை  சென்னையில் கைது செய்து  நேற்று கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த கொலைக்கு ஹனிட்ராப் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply