இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கிக்கு தற்போது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சேவையில் குறைபாடு மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்கு 84.50 லட்சம் ரூபாய் அபராத மாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நடத்திய ஆய்வில் விதிமுறை மீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக் கடன் வழங்குநர்கள் மன்றத்தின் கடன்கள் மோசடியானவை ஈன்று அறிவிக்க முடிவு செய்த 7 நாட்களுக்குள் அதை ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தவறிவிட்டது. அதோடு எஸ்எம்எஸ் எச்சரிக்கை கட்டணங்கள் வாடிச்சாளர்களிடமிருந்து அதிக அளவில் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக தான் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்து அபிராம் த்துள்ளது.