இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் பெண் குழந்தைகள் பெற்றுள்ள பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் அண்மையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட தற்போது 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். முதலில் குறைந்த பட்சம் 250 ரூபாய் செலுத்தி முதலீட்டை நீங்கள் தொடங்கலாம். இதில் 21 ஆண்டுகள் முதிர்வு காலம் முடியும் வரை பணத்தை எடுக்க முடியாது. ஏதாவது அவசர காரணங்களுக்கு மட்டுமே விதிகளுக்கு உட்பட்டு பணத்தை எடுக்க முடியும். மேலும் குழந்தைக்கு 18 வயது ஆகும்போது அல்லது குழந்தையின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.