ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, இடதுசாரி கட்சி எம்பி காத்தி கேபெல், வலதுசாரி எம்பி மார்ட்டின் ரெய் கார்டுக்கு அளித்த அதிரடியான பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்களின் உரிமைகள் குறித்த விவாதத்தின் போது மார்ட்டின் ரெய் கார்டு இடையூறு செய்ததால், கோபமடைந்த காத்தி கேபெல், “பெண்களின் பிறப்புறுப்பில் 3,000 நரம்பு முனைகள் உள்ளன, ஆனால் உங்களை விட அவை குறைவுதான்” என்று பதிலடி கொடுத்தார்.
இந்த எதிர்பாராத கருத்தைக் கேட்டு நாடாளுமன்றமே சிரிப்பலையில் ஆழ்ந்தது, மார்ட்டின் குழப்பமடைந்து அமைதியானார். இந்தச் சம்பவம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
பின்னர் தனது கருத்தில் உள்ள ஒரு அறிவியல் தகவலை காத்தி கேபெல் திருத்திக்கொண்டார். பெண்களின் பிறப்புறுப்பில் 3,000 அல்ல, 10,000-க்கும் மேற்பட்ட நரம்பு முனைகள் உள்ளன என்பதை மருத்துவ ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தினார். இருப்பினும், தனது பதிலடியின் மையக்கருத்தில் உறுதியாக இருந்த அவர், “ஒரு தரமற்ற தீர்மானத்தைக் கொண்டுவரும் போது, அதற்குரிய விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ‘ரியோட் பார்பி’ என்று அறியப்படும் காத்தி கேபெல் மீண்டும் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவரது துணிச்சலான மற்றும் நக்கலான பேச்சை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
