தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் இன்று விழுப்புரத்தில் கள்‌ விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் சீமான் கள் குடித்தார். பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பிரபாகரனுடன் இருப்பது போன்று  இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் போட்டோவை எடிட் செய்து தந்ததாக கூறிய குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்க அதற்கு சீமான் அதை விடுங்க என்று கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டார். அ

தன் பிறகு அவர் பேசியதாவது, பெரியார் என்று பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என்று சொல்லும் பெருமக்கள் பெரியாரைப் பற்றி பேசி வாக்கு வங்கி கேட்க வேண்டியதுதானே. சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அதனால் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று ஒரு முறை சொல்லிப் பாருங்கள். பெரியாரை சொல்லி வாக்கு வாங்க போறீங்களா இல்ல காந்தி படத்தினை காட்டி வாக்கு வாங்க போறீங்களா.? மேலும் கொள்கை வழி நின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளைக் கொட்டிக்கொடுத்து வாக்கினை பறிக்க வேண்டிய நிலை ஏன் வருகிறது என்று கேட்டார்.