
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அந்தக்கரைப்பகுதியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் பிரதமர் உட்பட அனைவரும் எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய இயலாது. நேற்று, இன்று, நாளை என எந்த காலத்திலும் புதிய கட்சியை ஆரம்பிக்கும் அனைவருமே எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை.
எம்ஜிஆர் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை. எந்த எந்த கட்சியினராக இருந்தாலும் எம்ஜிஆரை போல ஆட்சி செய்வோம் எனவே கூறுவர். ஆனால் யாரும் கருணாநிதியைப் போல் ஆட்சி செய்வோம் என கூறுவதில்லை என அவர் விமர்சித்தார். மேலும் திமுக எத்தனை பேர் வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் 2026 இல் திமுக படுதோல்வி அடையும் எனவும் விமர்சித்திருந்தார்.