ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு கேட்டு இபிஎஸ் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும். கூட்டணி சேர்ந்து விட்டால் அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை தான் கேட்பார்கள் என்பது இல்லை. வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி என்று அவர் பேசி உள்ளார்.