நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தவெக அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதைக் கண்டித்தும், தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திமுக மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கறுப்பு உடை அணிந்து இன்றைய நகர்மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த புதுமையானப் போராட்டம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஆளுங்கட்சிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே நிலவும் மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கடந்த சில மாதங்களாகப் பெயரளவிற்குக்கூட நிதிகள் விடுவிக்கப்படாததால், வார்டுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும், திட்டப்பணிகள் அனைத்தும் முடங்கிப் போய்விட்டதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் தங்களை கேள்வி கேட்பதைத் தவிர்க்கவே இந்த நிதி ஒதுக்கீடு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாக அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

தங்களது கோரிக்கைகளை அரசு நிர்வாகம் உடனடியாகச் செவிமடுத்து நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த கறுப்பு உடை போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர்கள் கூறினர்.

“>

 

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என எச்சரித்துள்ள இச்சம்பவம், மாநில அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.