சல்மான்கானின் முன்னாள் காதலியான சோமி அலி, பல வருடங்களுக்கு பிறகு சல்மான் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சல்மான்கானின் வாழ்க்கையில் பல காதலிகள் வந்துப் போனாலும், அவர்களில் முக்கியமானவர் சோமி அலி. 1991 முதல் 1999 வரை சல்மான்கானுடன் உறவில் இருந்த சோமி, அவரின் நடத்தை பொறுக்க முடியாமல் அவரை விட்டு பிரிந்தார். சமீபத்தில் நடந்த ஒரு சமூக வலைதள கேள்வி-பதில் நிகழ்ச்சியில் சோமி, சல்மான்கானின் கொடுமைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
“சல்மான்கான் ஒரு மூர்க்கமான நபர், அவருடன் உறவில் இருப்பவர்கள் சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகே அவரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள்,” என்று சோமி கூறினார். காதலில் இருந்த பெண்கள் 7 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் இருப்பது சாத்தியமில்லாதது என்பதையும் அவர் விளக்கினார். மேலும், பிரேக்-அப் செய்ய வேண்டிய தேவையில்லை, அவரின் கொடுமை தாங்க முடியாமல் பெண்களே அவரை விட்டு சென்றுவிடுவார்கள் என கூறினார்.
சல்மான்கானுடன் உறவிலிருந்தபோது சுமார் எட்டு முறை அவர் ஒன் நைட் ஸ்டாண்ட் கொண்டதாகவும், அவரின் உடல்ரீதியான மற்றும் மனரீதியான கொடுமைகளை தாங்க முடியாமல் வெளியேறியதாகவும் சோமி அலி வெளிப்படையாக தெரிவித்தார். சல்மான் கானை விட லாரன்ஸ் பிஸ்னோய் சிறந்தவராக இருப்பார் என கூறினார். இவரின் கருத்துக்கள் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.