மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம் மாநிலத்தில் பெண்கள் வாழ்க்கையை எளிமையாக நடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணமாக இதற்கு முன்னர் உள்ள திட்டங்களுடன் லட்லி பெஹ்னா யோஜனா திட்டமும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் எளிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். இந்தத் திட்டம் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து தொடங்கப்படும். அன்றைய நாளிலிருந்து இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.