கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://in Karnataka.in/பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் https://kpcc.in/indexk.html# என்ற பொய்யான இணையதளத்தை உருவாக்கி காங்கிரஸ் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இணையதள பக்கத்தை மீட்க காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப வல்லுநர் குழு முயற்சி செய்து வருகின்றனர்.