இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை (கன்பார்ம் டிக்கெட்) முன் பதிவு செய்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருதி ரயில்வே அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நாட்டின் கோடிக்கணக்கான ரயில் பயணிகளில் அதிகமானோருக்கு உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை வழங்க அமைச்சகம் ஒரு செயல் முறையை வகுத்து உள்ளது.

இத்தகவலை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். தன் புதிய செயல்திட்டத்தில் இந்திய ரயில்வே தற்போது டிக்கெட் வழங்கும் திறனை நிமிடத்திற்கு 25000ல் இருந்து 2.25 லட்சமாகவும், விசாரணை திறனை நிமிடத்திற்கு 4 லட்சத்திலிருந்து 40 லட்சமாகவும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. அதோடு 2023-24 நிதி ஆண்டில் 7000 கி.மீ புது ரயில் பாதைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் தன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாட்டிலுள்ள 2,000 ரயில் நிலையங்களில் 24 மணிநேரமும் செயல்படும் “ஜன் சுவிதா” கடைகள் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.