நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து  தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரியாபாணி என்று இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பயணிப்பதன் மூலமாக  நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு சுமார் 3.30 மணி நேரத்தில் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்