சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. தற்போது கௌசல்யா தனது குழந்தையுடன் பெங்களூரில் தங்கி இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வினோத்குமார் தனது வீட்டுக்கு அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் வினோத்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வினோத் குமார் அவரது நண்பர் குமரன் ஆகியோர் மது குடித்த போது அந்த வழியாக சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தனர். அப்போது வினோத்குமார் கஞ்சா அடிப்பவர்களை விட்டுவிட்டு மது குடிப்பதை தட்டி கேட்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்ததும் கஞ்சா அடிக்கும் கும்பலைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் எங்களை போலீசில் மாட்டி விடுகிறாயா என கேட்டு வினோத்குமாருடன் தகராறு செய்துள்ளார். இதனால் நரேஷ் குமார் தனது கூட்டாளிகளுடன் இணைந்து