ஆந்திர மாநிலம் குண்டக்கல் ரயில் கோட்டத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணி வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதி மற்றும் காட்பாடி இடையே காலை 6.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், காட்பாடி மற்றும் திருப்பதி இடையே இரவு ஒன்பது புள்ளி 50 மணிக்கு இயக்கப்படும் பயணியர் ரயில்கள் வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதனைப் போலவே காட்பாடி ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ரயில்களும் 24 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரம் மற்றும் திருப்பதி இடையே காலை 5.30 மணி ரயில் வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் இனத்திற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.