இந்தியாவில் உள்ள சில ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து இந்த அவசர அலெர்ட் செய்தி ஏன் வந்தது? போனை ஹேக் செய்து விட்டார்களா? என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, நிலநடுக்கம், சுனாமி, திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கான தயார்நிலையை அரசு தீவிரமாக மேம்படுத்தி வருகிறது.

இதனை அடுத்து இன்று சிலரின் போன்களுக்கு அவசர அலெர்ட் மெசேஜ் அனுப்பப்பட்டது. அதில், “இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட சோதனைச் செய்தி. இது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பு சோதனையின் ஒரு பகுதியாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.