மகாராஷ்டிரா நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் மாநாடு சென்ற 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவற்றில் ஒரு பகுதியாக குழந்தை விஞ்ஞானிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

அதன்படி தமிழகத்தின் நாகப்பட்டினம் மாணவர்கள் காட்சிப்படுத்திய கண்பார்வை இழந்தோருக்கான பிரத்யேக கண்ணாடி பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது. நாகை மாணவர்கள் சபரிவாசன் மற்றும் அப்சல் முகமது இரண்டு பேரும் சேர்ந்து இதை வடிவமைத்து உள்ளனர். இவற்றில் சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு உள்ளது.

கண் பார்வையற்றவர்கள் இக்கண்ணாடியை போட்டுக்கொண்டு செல்லும் போது, இவை சாலைகளில் உள்ள இடர்கள் பற்றி எச்சரிக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர். பார்வையற்றவர்கள் இந்த கண்ணாடியை பயன்படுத்தினால், மற்றவர்களின் உதவி இன்றி செயல்பட முடியும். பேட்டரி வாயிலாக இயக்கப்படும் இந்த கண்ணாடியின் விலை 2 ஆயிரம் ரூபாய் என மாணவர்கள் தெரிவித்தனர்.