இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி மாற்ற உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.  இதற்காக குறிப்பிட்ட ஒரு கட்டணம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில்,ஆதார் வைத்திருப்பவர்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை புதுப்பிக்க ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதாரில் பயோமெட்ரிக் தகவலைப் புதுப்பிக்க 100 ரூபாய் செலுத்த வேண்டும். புதிய பதிவு செய்வதற்கும் குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிப்பதற்கும் பணம் செலுத்தத் தேவையில்லை. சந்தேகங்கள் இருந்தால் 1947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம்.