இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் யாரும் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம். இதற்கு பதிலாக இணையதளங்களிலேயே கேஒய்சி அப்டேட்டை சரி செய்து கொள்ளலாம். அதன்படி வங்கி கணக்கு தாரர்கள் தங்களுடைய இமெயில், செல்போன் நம்பர், ஏடிஎம் மற்றும் நெட் பேங்கிங் வழியாக சுய அறிக்கை ஒன்று சமர்ப்பித்தால் போதுமானது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை கேஒய்சி சரி பார்ப்பதற்காக வங்கிகளுக்கு நேரடியாக அழைக்கக்கூடாது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதோடு வாடிக்கையாளர்கள் கேஒய்சி ‌ அப்டேட்டை சரி செய்வதற்கு போதுமான வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனையடுத்து வங்கி கணக்கின் முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், தனது புதிய முகவரிக்கான ஆவணங்களை கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டும். மேலும் இந்த ஆவணங்களை வங்கிகள் 2 மாதத்திற்குள் சரி பார்க்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது