அருணாச்சலப்பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் அடிப்படையில் சீனா அம்மாநிலத்திலுள்ள 11 இடங்களின் பெயர்களை “திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான்” என பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்கு பின் சீனா இவ்வாறு வரைபடத்தை வெளியிட்டு உள்ளது. இம்மாநாட்டின் கூட்டத்தில் சீனா பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பெயரிடப்பட்ட 11 இடங்களில் 5 மலை சிகரங்கள், 2 குடியிருப்புப் பகுதிகள், 2 நிலப்பகுதிகள் மற்றும் 2 ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவினால் உரிமை கோரப்படும் பகுதியானது எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாகும். எனினும் சீனா இந்த இடங்களுக்கு சீன பெயர்களை சூட்டுவதன் வாயிலாக அவற்றை தங்களுடையதாக உரிமை கொண்டாட நினைக்கிறது.