உலகம் முழுவதும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திரித்யா டெக் என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த 13 ஊழியர்களுக்கு தற்போது காரை பரிசாக வழங்கியுள்ளது. இந்நிலையில் திரித்யா டெக் நிறுவனம் ஐடி மற்றும் டிஜிட்டல் உரு மாற்றம் சேவைகளை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம் நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கியது தற்போது பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.