
இந்திய மகளிர் அணி நேற்று ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் 370/5 ரண்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் இதுவே இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு 2024 ஆம் வருடம் 358 ரன்கள் இந்திய மகளிர் அணி எடுத்திருந்தது. அதேபோன்று 2017 ஆம் வருடமும் 358 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்திய மகளிர் அணி Highest ஸ்கோராக 370-ஐ பதிவு செய்துள்ளது. மேலும் அயர்லாந்துக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி வாகையும் சூடி உள்ளது.