இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு… நடந்தது என்ன…? ஒருவர் கைது….!!!!!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு  நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்  மரணத்திற்கு பின் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வடக்கு லண்டனில் அமைந்துள்ள  லுட்டன் நகருக்கு பயணம் செய்துள்ளார். பின்னர் அவர்  பொதுமக்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது  சார்லஸ்ஸை நோக்கி முட்டை வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மன்னர் சார்லஸை மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து பேசி கைக்கலுக்கியுள்ளார். மேலும் மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.