சார்ஜிங் கேபிள் பழுதாகி கம்பிகள் வெளிப்பட்டாலும் சிலர் டேப் ஒட்டி அதனை பயன்படுத்துவார்கள். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று இங்கிலாந்தின் மின் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்காலிகமாக ரிப்பேர் செய்யப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தினால் போன் வெடித்து விடும் அபாயமும் அதிகம் உள்ளது. இது போன்ற சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருவதும் தெரிய வந்துள்ளது. போலி மற்றும் தரம் குறைந்த சார்ஜர்களை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.