ஆவின் நிறுவனமானது 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், வருடந்தோறும் ஆவின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 250 ரூபாய்க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.10மதிப்புள்ள ஐஸ்கிரீம், ரூ.500-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.20 மதிப்புள்ள ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகை சென்னையில் உள்ள ஆவின் பாலகங்களில் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.