ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைபாடு என்ன என்ற கேள்விக்கு, பிப். 7ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என ட்விஸ்ட் கொடுத்துள்ளார்