புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ, மாணவிகளை மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று  மதியம் பள்ளியில் இருந்து அந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியர் திலகவதி ஆகிய இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த போட்டி தொட்டியத்தில் உள்ள தனியார் காலூரியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டிக்காகதான் நேற்று மதியம் ஒப்புதலோடு 13 மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவிகள் 4 பேர் கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். பின்னர், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மாணவிகளின் குடும்பத்தாருக்கு தலா 72 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.