மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வரும் சிவாத்திரி மகா சிவராத்திரியாக அழைக்கப்படுகிறது.  இதையொட்டி  தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோகாவில், மகா சிவராத்திரி ஜாக்கி வாசுதேவ் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழாவில் பக்தர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம் என ஈஷா அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு ஈஷா இணையதளத்தில் https://isha.co/msr23-tn முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.